Thursday, July 5, 2012

தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....


தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்



தென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.

இந்த ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ஏழாயிரம் பண்ணை,சிவகிரி,அளகாபுரி பாளையக்காரர்களாக விளங்கியவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லிபுத்தூர் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட சிவகிரி பாண்டியர் வன்னியரே.

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த சமுசிகாபுரம் ஓர் ஜமீனாக விளங்கியது.இதனை ஆண்ட ஜமீந்தார்களுள் சிறந்தவராகக் கருதப்படுபவர் திரு.கருப்ப வன்னியனார் ஆவார்.

இவரது தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் ஆவார்.இந்த ஜமீனின் முதல் ஆட்சியாளர் இவர்தான்.

கருப்ப வன்னியனார் தமது ஜமீனின் மக்களுக்காக பல நற்பணிகளைச் செய்துள்ளார்.


"ஏழு குளம் ஆண்ட எஜமான்" என்று மக்களால் அழைக்கப்பெற்றவர். இன்றும் இவர் வழி வந்தோரை அவ்வூர்(சமுசிகாபுரம்) மக்கள் "எஜமான்" என்றும் "சாமி" என்றும் "மகராஜா" என்றும் "பாண்டியன்" என்றும் அழைக்கின்றனர்.

பெரிய கருப்ப வன்னியனாருக்கு "மாப்பிள்ளைத்துரை" என்ற பட்டமும் உண்டு.இவர் தமது தந்தை,தாய் பெயரில் இரண்டு ஊர்களை உருவாக்கினார்."சங்கரபாண்டியபுரம்", "கோதை நாச்சியார்புரம்" என்ற இரண்டு ஊர்களும் இன்றும் உள்ளன. கருப்ப வன்னியனாரின் தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் பெயரையும், அவர் தாயார் திருமதி.கோதை நாச்சியார் பெயரையும் அவ்வூர்கள் தாங்கி நிற்கின்றன.


வரலாறு சொல்லும் நாம் யார் என்பதை.நமக்கு விளம்பரங்கள் தேவையில்லை.



தென் தமிழ் நாட்டில் வன்னியர் இல்லை என சில வேற்று ஜாதியினர் கூறுவது அவர்கள் அறியாமையையே காட்டுகிறது.