Thursday, August 9, 2012

சிவகிரி வரகுண ராம பாண்டிய வன்னியனார் பற்றி கடிகை முத்து புலவர் அவர்கள் பாடிய திக்கு விஜயம் நூல் பற்றிய திரு.நடந் காசிநாதன் அவர்களின் ஆய்வு :

சிவகிரி வரகுண ராம பாண்டிய வன்னியனார் பற்றி கடிகை முத்து புலவர் அவர்கள் பாடிய திக்கு விஜயம் நூல் பற்றிய திரு.நடந் காசிநாதன் அவர்களின் ஆய்வு :

எமக்கு இந்த செய்தியை அளித்த பாபு நாயக்கர் அண்ணன் அவர்களுக்கு நன்றிMonday, August 6, 2012

சிவகிரி ஜமீன் தொடர்பான புகைப்படங்கள் - நடன.காசிநாதன் எழுதிய வன்னியர் என்ற புத்தகத்தில் இருந்து
மதுரை பாண்டியனால் அனுப்பப்பட்டு முதன் முதலில் வன்னிய பாளையம் அமைந்த இடம் . "சுண்டன்குளத்தில் உள்ள வன்னியர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்."
 
Sunday, July 29, 2012

ஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு

தென்சீமை ஏழாயிரம்பண்ணை பாளையப்பட்டுக்கு அதிபதியாய் இருந்த முத்துசாமி வன்னியனும் அவரது பரம்பரையினரும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவி புரிந்தமைக்காக பாளையக்காரர் முத்துசாமி வன்னியனை ஆங்கிலேயர் கைது செய்து அந்தமானுக்கு அனுப்பிய பொது அவரின் தம்பியாகிய சிதம்பர வன்னியன் ஆங்கிலேய ஆளுநருக்கு சமர்ப்பித்த கருணை மனுவில் தங்களின் குல கோத்திரம் பற்றி குறிப்பிடும் போது , தம்மை அக்னிகுலத்தவர் என்றும் ,பன்றி குட்டிகளை பிறந்து உருமாறிய கதையையும் (சாளுக்கியர் ), அக்னி குதிரை எரிய கதையையும் (வீர வன்னியர் அக்னி குதிரை எரிய கதை) குறிப்பிட்டுள்ளார் . 
நன்றி :" ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும் "

Saturday, July 28, 2012

வரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ) சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் என்பவற்றின் தலைமையில் சிவகிரி வாரிசுகள் 126 பேர் சொத்துரிமை கேட்டு மனு தாக்கல் - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

வரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ) சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் என்பவற்றின் தலைமையில் சிவகிரி வாரிசுகள் 126 பேர் சொத்துரிமை கேட்டு மனு தாக்கல் . இதில் சரவண பாண்டிய வன்னியரும் அடக்கம் . நம்மோடு மக்கள் தொலைக்காட்சியில் இது வன்னியர் ஜமீன் என்றுரைத்தவரும், வருடா வருடம் அங்கே வன்னியர் குல சத்ரியர் சார்பாக விழா எடுப்பவரும் இவர்தான் .இதோடு இந்த சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் தங்களின் பாட்டியாக சொல்லிருப்பதும் வன்னியர் ஜமீன் ஏழாயிரம் பண்ணையின் பட்டத்து அரசி கண்ணுத்தாய் (எ) முத்தாலம்மா என்பவர் . இந்த ஜமீனில் சொத்துரிமை கேட்டு பொய் வழக்கு போட்டு சிக்கியவர் ,அந்த ஜமீனில் வேலை செய்த நடராஜா தேவரின் மகன் என்.ஜெகநாதன் என்பவர் . போலி உயில் செய்து வன்னியர் ஜமீன் சொத்துக்களை அபகரிக்க பார்த்த இவர் இப்போது சிறை தண்டனை வாங்கியுள்ளார் :)Monday, July 23, 2012

சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்

சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்

http://www.maalaimalar.com/2012/07/23041959/sivagiri-jameen-swiss-bank-no.html 

 


 

சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந்தி


சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது என்று மீண்டும் ஒரு ஆதாரம் -

சிவகிரி வாரிசுகளில் ஒருவரான டி.செல்வராஜ் பேட்டி : தினத்தந்தி (23-07-2012)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=746445&disdate=7%2F23%2F2012 

நன்றி தினத்தந்திக்குசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர் செய்தி

18ம் நூற்றாண்டில் உருவான சிவகிரி ஜமீன், வன்னியர் குலத்தை சேர்ந்தது என்ற தினமலர் செய்தி .

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=513348


Thursday, July 12, 2012

"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே என்பதை தனது "தென் தேச யாத்திரை" என்னும் கட்டுரையில் இனவரைவியலாளர் திரு. ஆறு. அண்ணல் கண்டர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

அவரின் கட்டுரையில் இருந்து சில வரிகள்:

வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

1925 ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.


அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.

சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.நன்றி: திரு. ஆறு. அண்ணல் கண்டர்


Source:


http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_3995.html

Thursday, July 5, 2012

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வன்னியர்கள் செய்து வரும் "பௌர்ணமி பூசை"


தென் தமிழ்நாட்டில் உள்ள அக்னிகுல க்ஷத்ரிய வன்னியர் சமூகத்தினர் ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் "பௌர்ணமி பூசை" செய்து வருகிறார்கள்.

இவ்விழா இக்கோவிலில் இப்பகுதியில் வாழ்ந்த வன்னிய பாளையக்காரர்களுக்கு இருந்த உரிமையாகும். இதை இந்நாளில் மதுரையின் தென் பகுதியில் இருக்கும் வன்னியர்கள் செய்து வருகிறார்கள்.

நன்றி : 'தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு', திரு.நடன. காசிநாதன்  

சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்பழனியில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார். 


அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த "லோக குருசாமி" 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்... மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.

இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக  பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.

இன்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் நகரில் கணிசமான அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்பாசமுத்திர நகரமன்ற உறுப்பினராக வன்னியர் ஒருவர்  இருந்து வருகிறார்.  

நன்றி : தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன்.

சிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சிவகிரி காதல் என்னும் நூல்.வரகுணராமன் புகழ்ப்பாடும் சிவகிரி காதல் என்னும் நூல் 

"வன்னிய குல தீப வரகுணராமப் பாண்டிய 
மன்னனென்த் தென்மலையில் 
வாழ்வேந்தர் வெச்சரிகை."

என்றும் 

"வன்னியகுலராச வரகுணராமப் பாண்டிய 
நன்னயவான் வாராமல் நங்கை 
மயங்கி சேர்ந்தாள்."

என்று கூறியிருக்கின்ற பாடல் வரிகளில் சிவகிரி வரகுணராமப் பாண்டியனை "வன்னியகுலத்தின் ஒளி விளக்கே" என்றும் "வன்னியகுல அரசன்" என்றும் கூறியுள்ளதை காண்க.
                    
நன்றி: தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன் .    

சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்?: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 Source: http://tamil.oneindia.in/news/2012/07/05/tamilnadu-pandya-riches-swiss-banks-madras-hc-asks-govt-to-find-157050.html 


 மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பணம் சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி ஜமீன். ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஜமீனுக்கு சொந்தமான பல சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சிவகிரி ஜமீனான செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏராளமான சொத்துகளுக்கு அவர் உரிமையாளர் ஆனார். பின்னர் அந்த சொத்துகளில் பல அவரது வாரிசான வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியாருக்கு சொந்தமாகின.
அதன் பின்னர் வரகுணராம பாண்டிய தம்பியாரின் சட்டபூர்வமான வாரிசு நான்தான் என்று கூறி எஸ்.கே.ஜெகநாதன் என்பவர் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். எனினும் நான்தான் உண்மயான வாரிசு என்று கூறி திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பத்மினி ராணி அந்த வழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்ந்துள்ளார். இவை நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல ஊர்களில் பரவிக் கிடப்பதாகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் பல சொத்துகள் உள்ளதாகவும், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான எல்லா சொத்துகளையும் அடையாளம் கண்டு, அதனை வரகுணராம பாண்டிய சின்னதம்பியாரின் சட்டபூர்வ வாரிசான தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்மினி ராணி ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி. ஜோதிமணி, எம். துரைசாமி ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுவிஸ் வங்கியில் முதலீடு

இதன்படி மாநில காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஒருவரைக் கொண்டு தமிழக அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் அறிக்கை கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இது தவிர சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியிலும் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வங்கிக் கணக்கு தொடர்பான பொது அதிகாரத்தை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா என்பவர் பெற்றிருந்தார். காசினா மும்பையைச் சேர்ந்த மாயா என்ற பெண்ணை திருமணம் செய்தவர் ஆவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மும்பைக்காரருக்கு அதிகாரம்?

இதற்கிடையே அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் வித்யா என்ற பெண் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா சாலை விபத்தில் இறந்து விட்டார். நான் அவரது மனைவியான மாயாவின் தங்கை. சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிஸ் வங்கியில் இருப்பது தொடர்பான பொது அதிகாரம் தற்போது எங்களிடம்தான் உள்ளது. ஆகவே, அந்த சொத்துகளில் எங்களுக்குதான் உரிமை உள்ளது என்றார்
இதனைத் தொடர்ந்து வெளிநாடு உள்பட சிவகிரி ஜமீனின் சொத்துகள் பல இடங்களில் பரவிக் கிடப்பதால் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தும் வகையில் இந்த விவகாரத்தை ஆராயும் பொறுப்பினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி நீதிதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாண்டிய மன்னர்களின் வாரிசுகளின் பணம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த எந்த வங்கியிலாவது முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா

தென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா


பரமக்குடி, மார்ச் 15: பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா 4-ம் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வன்னியகுல ஷத்திரிய மகாசபையினரால் வண்டி மாகாளி உற்சவ விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா, மார்ச் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொ டங்கியது.செவ்வாய்க்கிழமை காலையில் ரிஷப வாகனத்தில் வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப்படியில் எழுந்தருளினார்.

 இதையொட்டி மாலை 4.30 மணிக்கு வன்னியகுல ஷத்திரியர்கள் வண்டி மாகாளி வேஷமிட்டும், புலி வேஷமிட்டும் ஊர்வலம் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் சென்றடைந்தனர்.மார்ச்-20-ம் தேதி இரவு 7.45 மணிக்கு விசேஷ மின்சார தீப அலங்காரத்துடன் அம்பாள் தேரோட்டம் நடைபெறும்.

Source http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=391200&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=SocialTwist%20Tell-a-Friend

தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....


தகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்தென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.

இந்த ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ஏழாயிரம் பண்ணை,சிவகிரி,அளகாபுரி பாளையக்காரர்களாக விளங்கியவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லிபுத்தூர் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட சிவகிரி பாண்டியர் வன்னியரே.

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த சமுசிகாபுரம் ஓர் ஜமீனாக விளங்கியது.இதனை ஆண்ட ஜமீந்தார்களுள் சிறந்தவராகக் கருதப்படுபவர் திரு.கருப்ப வன்னியனார் ஆவார்.

இவரது தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் ஆவார்.இந்த ஜமீனின் முதல் ஆட்சியாளர் இவர்தான்.

கருப்ப வன்னியனார் தமது ஜமீனின் மக்களுக்காக பல நற்பணிகளைச் செய்துள்ளார்.


"ஏழு குளம் ஆண்ட எஜமான்" என்று மக்களால் அழைக்கப்பெற்றவர். இன்றும் இவர் வழி வந்தோரை அவ்வூர்(சமுசிகாபுரம்) மக்கள் "எஜமான்" என்றும் "சாமி" என்றும் "மகராஜா" என்றும் "பாண்டியன்" என்றும் அழைக்கின்றனர்.

பெரிய கருப்ப வன்னியனாருக்கு "மாப்பிள்ளைத்துரை" என்ற பட்டமும் உண்டு.இவர் தமது தந்தை,தாய் பெயரில் இரண்டு ஊர்களை உருவாக்கினார்."சங்கரபாண்டியபுரம்", "கோதை நாச்சியார்புரம்" என்ற இரண்டு ஊர்களும் இன்றும் உள்ளன. கருப்ப வன்னியனாரின் தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் பெயரையும், அவர் தாயார் திருமதி.கோதை நாச்சியார் பெயரையும் அவ்வூர்கள் தாங்கி நிற்கின்றன.


வரலாறு சொல்லும் நாம் யார் என்பதை.நமக்கு விளம்பரங்கள் தேவையில்லை.தென் தமிழ் நாட்டில் வன்னியர் இல்லை என சில வேற்று ஜாதியினர் கூறுவது அவர்கள் அறியாமையையே காட்டுகிறது.

சிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :


சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும்.

பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்

சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை:

சகல விருதுகளுடையோன், சந்திரபதி,

அரசுபதி,  வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.
=========================================


This one of the leading vanniyar palayam was located in the Sivagiri taluk of Tirunelveli, on the slopes of the Western Ghats.

proof

http://books.google.mv/books?id=Erin3nkU3ZUC&q=sivagiri#v=snippet&q=sivagiri%20vanniya%20by%20caste&f=false

The Poligar of Sivagiri.
=======
Sivagir poligars belong to the “Palli or Vanniyan caste”.
Please refer to “History of the military transactions of the British nation in Hindustan” written by Orme(1861).
Also refer to the Tirunelveli district Gazetter (Page 416-419) published in 1916 by H.R.Pate.
There is a literary work “Sivagiri Kadhal” written by a poet named Pugazhendhi in which the Sivagiri chieftain is mentioned as “vanniya kula rasa Varagunarama pandiyan”.
Also a descendant of poligar of Sivagiri even participated in a Vanniyar(Palli) caste conference.
The zamindar of Sivagiri Sri.Sangili Veeera Pandiya Chinnathambiar(1854-1896) is defintely a Vanniyar by caste.

சிவகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய ஒரு ஆய்வு :

திரு.அண்ணல் கண்டர் அவர்கள் சிவிகிரி ஜமீனுக்கு நேரடியாக சென்று அங்குள்ளவர்களை பார்த்து ,பல செய்திகளை நேரடியாக கேட்டு எழுதிய ஆய்வு இது . வன்னியர் பாளையமாக இருந்த இப்பாலயத்தில் , ஒரு வன்னியர் மட்டும் மறவர் சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்ததால் சில காலமாக மறவர் சாதியுடன் உறவுகாரர்களாக இருக்கும் வன்னியர்களின் ஜமீன் .


 என் தென் தேச யாத்திரை

இது புகழ் பெற்ற பழைய தொடர் கட்டுரை ஒன்றின் தலைப்பு. தற்போது
( ஏப்ரல் 2012 - அதாவது இந்த கட்டுரை எழுதும் போது) ஜூனியர் விகடனில்
ஜி. ராமகிருஷ்ணன், எனது இந்தியா என்கிற தலைப்பில் எழுதி வருகிறார்
அல்லவா ! இதை போலவே, 1930 களில் சுதேசமித்திரன் இதழில் திரு.உலகநாத நாயகர் என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். மேலும் வன்னியகுல க்ஷத்ரிய மகாசங்கத்திலும் சேவையாற்றி வந்தார். அவர் எழுதிய தொடர் கட்டுரையின் தலைப்பே எனது தென் தேச யாத்திரை. இந்த கட்டுரை தொடர் தனது எழுத்து பணிக்கு பெரும் தூண்டுதலாக இருந்தது என்று புகழ்பெற்ற சரித்திர நாவலாசிரியர் திரு .சாண்டில்யன் அவர்கள் புகழ்ந்து எழுதியதை எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரிநாடன் அவர்கள் உணர்வுபூர்வமாக குறிப்பிடுவார்.

ந்த படத்தில் இடமிருந்து மூன்றாவதாக அமர்ந்திருப்பவர் தான் திரு. உலகநாத நாயகர்.  படத்தில் உள்ள மற்றவர்களும் வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்திற்கு உழைத்தவர்களே.  1930 களில் இந்த நிழற்படம் எடுக்கப்பட்டது. ஸ்ரீ மான் "சம்புகுல வள்ளல்" சென்னை காட்டுப்பாக்கம் பா. ல. முருகேச நாயகரின் வாரிசு ஒருவரது  வீட்டில் இந்த படம் காணப்படுகிறது.   


சரி!இப்போது இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நானும் எனது மாப்பிள்ளை திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்களும் சுமார் 12 நாட்கள் பயணம் செய்தோம். அந்த பயணத்தின் முக்கிய செய்திகளை விளக்குவதால் இந்த கட்டுரைக்கு "எனது தென் தேச யாத்திரை" என்று தலைப்பிட்டேன்.

இந்த பயணத்திற்கு இரண்டு நோக்கங்கள். ஒன்று மூன்றாயிரம் ரூபாய் விலையுள்ள "க்ஷத்ரியன்" இதழ் தொகுப்பை promote செய்வது. இரண்டாவது தென் மாவட்டங்களில் வன்னியர் நிலை பற்றி அறிந்து கொள்வது.
தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரது மகனும் அச்சக அதிபருமான திரு. வேல் முருகன் அவர்கள் இப் பயணத்திற்கு பெரிதும் துணையாய் இருந்தார். குற்றால அருவிக்கு அருகிலேயே அறையும் எடுத்து கொடுத்திருந்தார். அவரது உதவியுடன் தென்காசியில் வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிக்கு சென்று பார்த்தோம்.

தென்காசி நகரின் மீன் வியாபாரம் வன்னியர்கள் கையில் தான் இருக்கிறது. குறுகலான தெருக்களை கொண்ட சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி இது. இந்த பகுதிக்குள்ளேயே சுமார் 10 கோவில்களும் இருக்கின்றன.

பொதுவாக தென் மாவட்டங்களில் வசிக்கும் வன்னியர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. தென் பகுதி வன்னியர்களின் குல தெய்வ கோவில்களும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கின்றன.


தென் பகுதி வன்னியர்கள், அவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்களின் நினைவுக்கு எட்டிய காலம் தொட்டு தென் மாவட்டங்களில் தான் வசித்து வருகின்றனர்.

நாதஸ்வரம், மிருதங்கம் வாசித்தல், இசைக்கலையை  கற்பித்தல் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்தல் ஆகியவை தொழிலாக இருந்துள்ளன.

படையாட்சி, அண்ணாவி (இந்த தெலுங்கு சொல்லுக்கு "வாத்தியார்" என்று அர்த்தமாம்), புலவர் போன்றவை அங்கு சாமானிய வன்னியர்களின் பட்டபெயர்களாக இருக்கின்றன. 

மேலும் சவளக்காரன்  என்றும் குறிப்பிடபடுகின்றனர். சவளம் என்பது வாள் போன்ற ஒரு ஆயுதம் என்றும் அதனை கொண்டு போரிட்டதால் தாங்கள் அந்த பெயரிலும் அழைக்கப்பட்டதாக தென் பகுதி வன்னியர்கள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊருக்கு ஓரிரண்டு வன்னியர் குடும்பங்களாவது வாழ்ந்து வருகின்றனர். கடையநல்லூர் புளியங்குடி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் ஊருக்கு 100  குடும்பங்களுக்கு மேல் வன்னியர்கள வாழ்கின்றனர்.

குற்றாலத்தில் வன்னியருக்கு பாத்தியப்பட்ட மடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ...
 தமிழக அமைச்சராக இருந்த திரு. எஸ். எஸ். ராமசாமி படையட்சியாரின் பெயர் சொல்லும் கல்வெட்டு நெல்லை மாவட்டம் இடைகாலில் காணப்படுகிறது  

நெல்லை குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திசையன்விளை என்ற ஊரில் கூட 50 க்கும் மேற்பட்ட வன்னிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தென் பகுதி வன்னியர்களில் குமரி மாவட்ட வன்னியர்கள் நிலை வித்தியாசமானது .

1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநில பிரிவினையின் போது கேரள மாநிலத்தில் இருந்த நாகர் கோவில் , செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக வன்னியர் சமுதாய விடிவெள்ளிகளில் ஒருவரான திரு. அம்பாசங்கர் IAS அவர்கள் பொறுப்பேற்றார்.      
                    
 சமூக பற்று மிக்க அம்மேதை, தன் குல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார். கோட்டாறு, வடசேரி உள்ளிட்ட தற்போதைய குமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வன்னியர்கள் வசிப்பதையும், தங்கள் பூர்வ பெருமை அறியாது உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததையும் அறிந்தார்.

அவ்வன்னியர் வீடுகளில் இருந்துதான் அம்பா சங்கர் அவர்களுக்கு உணவு கொண்டு செல்லப்படும்.  நம் மக்களிடம், உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அவர் இதனை செய்திருக்கவேண்டும்.

நம் மக்களை அரவணைத்தாலும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் அம்பா சங்கர் அவர்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டது. நாகர் கோவில், செங்கோட்டை தாலுக்காக்களில் வன்னியர்களுக்கு சாதி சான்று வழங்குவதில் ஆவண ரீதியிலான முட்டுகட்டைகள் இருந்திருகின்றன.

எனவே, நம் மக்கள் உள்ளூர் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு "இந்து- பரதர்" என்று சாதி சான்று வழங்க வழி செய்தார்.

நாகர்கோவில் வடசேரியில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் திரு. முத்துராமலிங்கம் அவர்களின் தந்தையார் இவர்.
  

ஆனால் இன்னொரு பின்னடைவு அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அவர்கள் வன்னியர்களே என்றாலும் சாதி சான்றிதழ் வேறாக இருப்பதால் வடமாவட்டங்களை சேர்ந்த வன்னியர்கள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ தயங்குகின்றனர்.

ஆனாலும் தாங்கள் வன்னியர்கள் என்பதை விளக்கி, தங்கள் நிலையை புரியவைத்து அரியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வன்னியர்களிடம் குமரி மாவட்ட வன்னியர்கள் சம்பந்தம் செய்து உள்ளனர்.

குமரி மாவட்ட வன்னியர்களுக்கு, வன்னியரின் குல பெருமையும் உறவும் வேண்டும். அதே சமயம் பரதர் சான்றிதழின் மூலம் கிடைக்கும் சலுகையும் வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான நிலை தான்.

விருதுநகர் மாவட்டத்திலும் வன்னியர்கள் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர். வன்னியர்களுக்கு பாத்தியப்பட்ட பல கோவில்களையும் இங்கு காணலாம். ராஜபாளையத்தில் வன்னியர்களிடம் இருந்த திரௌபதி அம்மன் கோவில் எப்படியோ தெலுங்கு ராஜுக்கள் வசம் சென்று விட்டது.

ராஜபாளையத்துக்கு அருகில் தான் வன்னியர்களின் பெருமையை பறைசாற்றும் சிவகிரி அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் தற்போது நீதி மன்றம் உள்ளிட்ட அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்றன.     

சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த வீரபாண்டியன், ராஜபாளையத்தில் வணிகம் செய்து வருகிறார். அவரது வழிகாட்டலுடன் சிவகிரிக்கு சென்றோம். அரச பரம்பரையை சேர்ந்த சிலர் தேனீர் கடை நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து அளவளாவினோம்.

வன்னியகுல க்ஷத்ரியர்களான சிவகிரி அரச வம்சத்தாருடன் நான். 

சிவகிரி அரச வம்சத்தாருடன் புளியங்குடியை சேர்ந்த திரு. லக்ஷ்மணன் படையாட்சியார் அவர்கள் 


சிவகிரி அரச வம்சத்தாருடன் தென்காசியை சேர்ந்த திரு. வேல்முருகன் படையாட்சியார் அவர்கள்  

சிவகிரி அரச வம்சத்தாருடன் திரு. ஸ்ரீ விஜய் கண்டர் அவர்கள் 


அப்போது இலை வாணியர் அல்லது சேனை தலைவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்த திரு. நல்லசிவம் அவர்கள் எதிரில் வந்தார். சிவகிரி வம்சம் மறவர் சமுதாயம் என்று பொய் பிரச்சாரம் செய்து வருபவர் இவர் தான். அவரோடு பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது. அப்போது எதிரிலேயே இருந்த சிவகிரி அரச வம்சத்து வாரிசுகள் தங்களை வன்னியர் என்று கூறினாலும், இல்லை இல்லை நீங்கள் மறவர் தான் என்றார் நல்லசிவம். அவருக்கு சிவகிரி வரலாற்றை நாம் விளக்கினோம்.

அதாவது வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012  அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012  ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

சிவகிரி ஜமீன்தார் அனுப்பிய திருமண அழைப்பிதழ்
தற்போதைய சிவகிரி ஜமீன்தார் வன்னியகுல க்ஷத்ரியரான தெய்வ திரு. வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் அவர்களின் புதல்வன் என்ற செய்தி திருமண அழைப்பிதழின் உள்ளே இடம்பெற்றுருக்கிறது.

 

சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.
 
1925  ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.

சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.

அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். இந்த செய்திகளை எல்லாம் நல்லசிவத்திடம் காரசாரமாக விவாதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாலும் நீண்ட நேரத்திற்கு மனம் அமைதி அடையவில்லை.

இதை போலவே, தென் மாவட்ட வன்னிய அரசர்கள் பற்றி விளக்கமாக எழுதவேண்டும். அதை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம். 

திண்டுக்கல் மாவட்ட வன்னியர்களின் கதையோ வேறு. பெயர் தான் தென் மாவட்டமே தவிர வட மாவட்டங்களை போலவே வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி திண்டுக்கல்.

திண்டுக்கல், நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை வன்னியர்களே நிர்ணயிக்கின்றனர். ஆனால் வன்னியர்கள், இந்து வன்னியர் - கிருஸ்தவ வன்னியர் என்று பிரிந்து கிடக்கின்றனர்.
2011  ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பா ம க சார்பில் வன்னிய கிறிஸ்தவரான பால் பாஸ்கர் போட்டியிட்டார். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர். இந்தியாவின் புகழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடையது. பசுமை வானொலி என்ற பெயரில் பண்பலை வானொலியும் நடத்தி வருகிறார். கல்லூரி அதிபருமான இவருக்கு அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் நல்ல செல்வாக்கு. ஆனாலும் தோற்று போனார். காரணத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

திண்டுக்கல் வன்னிய கிறிஸ்தவரான பேராசிரியர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள் எழுதிய நூல்.  

மேலே காணும் புத்தகத்தின் 59  ஆம் பக்கத்தில்...

இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலபாரதி
கன்னடக்காரர்.

எல்லா ஊரிலும் கம்யூனிஸ்ட் கட்சி மதத்துக்கு எதிரானது ஆனால் திண்டுக்கல் தேர்தலில் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் ரகசிய கூட்டணி சேர்ந்து கிருஸ்தவரான பால் பாஸ்கர் ஜெயிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்து ஓட்டை பிரித்து கோட்டைக்குள் இறங்கினார் பாலபாரதி.

தமிழனும் தோற்றான். வன்னியனும் தோற்றான்.        
                   
திண்டுக்கல்லில் மறக்கமுடியாத இன்னொரு மாமனிதர் வன்னிய கிறிஸ்தவரான அருட்தந்தை பாத்திமா நாதன். தவசிமேடை என்ற ஊரில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். 70  வயதை கடந்த முதியவர். நாம் நேரில் சென்று பார்த்தபோது. ரத்த பாசத்தால் புளகாங்கிதம் அடைந்தார். நம்மை ஆசிர்வதித்தார்.

நாம் பார்த்ததில் தென் மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்த சில வன்னியர்கள் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்று கின்றனர். குறிப்பாக நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய காளியப்பன் குறிப்பிடதக்கவர். கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை அரசு விழா ஒன்றில் தி மு க சட்டமன்ற உறுப்பினரான மறவர் சமூகத்தை சேர்ந்த மாலைராஜா மேடையில் வைத்தே தாக்கினார். அப்போதைய
தி மு க அரசு இதை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. ஒட்டுமொத்த வன்னியர்களும் இதை ஒரு சம்பவமாகவே எடுத்து கொள்ளாத அவமானமும் அரங்கேறியது.

தென் மாவட்டங்களில் விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே வன்னியர்கள் வாழ்க்கை தரத்தில் உயர்ந்து உள்ளனர். பெரும்பான்மை வன்னியர்களின் நிலை போதிய உயரத்தில் இல்லை.

மொத்தத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அடியோடு இல்லை என்பதெல்லாம் பச்சை பொய்.

வட மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரை விட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே மெய்.

   -நன்றி-        

இப்பயணத்துக்கு உற்ற துணையாய் இருந்த திரு. ஸ்ரீ விஜய் கண்டர், தவத்திரு. அன்னை சகுந்தலா அம்மையார்,  திரு. வேல்முருகன், திரு. இசக்கியப்பன், திரு. ஆறுமுக நயினார், திரு. அரிகரன், திரு. வி. எம். முருகன் , திரு. சாமித்துரை, திரு. சுரேஷ், திரு. செண்பகராஜ், 
திரு. வீரபாண்டியன் (ராஜபாளையம்), திரு. குருநாதன் (திசையன் விளை), டாக்டர். முத்துராமலிங்கம் (கன்னியாகுமரி), வழக்கறி ஞர் திரு. நவநீத கண்ணன்( மதுரை ), திரு. சண்முக சுந்தரத்தின் மாமனார் (திண்டுக்கல்),   திரு. மைகேல் டேவிட் (திண்டுக்கல்) மற்றும் இந்த வலைப்பூவை உருவாக்கி தட்டச்சும் செய்த திரு. அ.கார்த்திக் நாயகர் உள்ளிட்ட அனைவருக்கும்...
          
http://annalpakkangal.blogspot.com/2012/05/blog-post_3995.html