Saturday, December 28, 2013

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் இளவரசி

சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .




வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .

இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "சங்கிலி வீரப்ப பாண்டியன்  "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .

இந்த செந்தட்டி காளை பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் ..

அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...

இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .

அதன் பிறகு வந்த வி.எஸ் .வரகுணராம பாண்டிய சின்னத்தம்பிய வன்னியனார் அவர்கள் கிபி 1972 யில் முடிசூடி சேத்தூர் ஜமீன் மறவர் "ராணி திரிபுர சுந்தரி நாச்சியார் " அவர்களை திருமணம் செய்தார் .
இவர்களுக்கு பிறந்த சேவுக பாண்டியன் என்னும் "விக்னேஷ் ராஜா " அவர்களே இப்போதைய ஜமீன்தார்


இருப்பினும்  தென்மலை ,சமுசிகாபுரம் , அழகாபுரி மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .

சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..

1. இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் " அவர்கள் .


                                

2. கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..


நன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி

Sunday, November 3, 2013

சிவகிரி ஜமீன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வன்னிமரத்தடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

சிவகிரி ஜமீன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வன்னிமரத்தடி விநாயகருக்கு வருடத்தில் ஒருநாள் கூடி சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம் .. சிவகிரியில் பிற சமூகத்தவர் கலப்பால் , அந்த சமூகத்தவர்கள் மட்டும் இந்த வழிபாட்டில் சமீப காலமாக சரியான நாட்டம் காட்டுவதில்லை ..

இருப்பினும் சுத்த வன்னியர்கள் இந்த வழிபாட்டை செய்கிறார்கள் .. குறிப்பாக தென்மலை, சமுசிகாபுரம் ஜமீன்தார்களும் , உருவுக்காரர்களும் இதை செய்கிறார்கள்; ..  இதோ அதன் புகைப்படம்








சிவகிரி ஜமீன் முதல் பாளையம் அமைந்த சுண்டன்குலம் வன்னியர் கோவிலில் வன்னிய சொந்தங்கள் கூடிய போது


வன்னியர்கள் முதன்முதலில் சிவகிரி சமஸ்தானத்தை உருவாக்கிய போது அவர்கள் முதல் கோவிலை கட்டி எழுப்பிய இடம் சுண்டன் குளம் ..

மன்னன் ஜெயதுங்க பாண்டியன் மதுரையை ஆண்ட போது , "சுண்டன் " என்கிற சண்டியன் தென்பகுதி மக்களை மிகவும் கொடுமை படுத்தினான் .இதை கேள்வி பட்ட பாண்டியர் திருபுவனத்தை ஆட்சி செய்த வன்னிய குல சிற்றரசர் தாஷ்டிக சுந்தரபாண்டிய வன்னியரை அழைத்து சுண்டனை அடக்கி வர ஆணையிட்டார் . சுந்தரபாண்டிய வன்னியரும் , சுண்டனை கொன்று திரும்பினார் . இதனால் மனமகிழ்ந்த பாண்டியர் , சுந்தரபாண்டிய வன்னியருக்கு தென்னாட்டை ஆள செய்தார் . இதனால் சுந்தரபாண்டிய வன்னியர் ஐந்து பாளையங்கள் நிறுவி , தனது ஐந்து மகன்களையும் ஆள செய்தார் . தமிழக அரசு 1916 ஆம் ஆண்டு பாளையக்காரர் பட்டியலை வெளியிட்ட போது , அதில் முதல் சிவகிரி மன்னராக இருந்தவர் விஜயரங்க வன்னியனார் . அடுத்து சங்கரபாண்டிய வன்னியனார் ,அடுத்து பெரியசங்கு வன்னியனார் , அடுத்து வரகுணராம பாண்டிய வன்னியனார் .

இந்த சுண்டன்குலம் தான் சிவகிரி சமஸ்த்தானத்தவர்கள் முதல் முதலில் பாளையம் அமைத்த இடம் ..

இங்கு சிவகிரி தென்மலை சமுசிகாரம் போன்ற வன்னிய மரபுள்ள நமது இனத்தோர் நேற்று இந்த கோவிலில் கூடினர் .

இதை வீரபாண்டிய வன்னியனாரின் மாப்பிள்ளை முத்துகுமார் வன்னியனார் அவர்கள் எனது புகைப்படங்களை அனுப்பினார் ..

அதை இங்கே பகிர்கிறேன் .. இந்த கோவில்கள் வன்னியர் கட்டுபாட்ட்லே இருக்கிறது ..

தென்மலை ஜமீன்தார் வீர பாண்டிய வன்னியனாரும் இதில் கலந்துள்ளார்  ..