வரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ) சென்தட்டிகாளை
வீரம்மாள் நாச்சியார் என்பவற்றின் தலைமையில் சிவகிரி வாரிசுகள் 126 பேர்
சொத்துரிமை கேட்டு மனு தாக்கல் . இதில் சரவண பாண்டிய வன்னியரும் அடக்கம் .
நம்மோடு மக்கள் தொலைக்காட்சியில் இது வன்னியர் ஜமீன் என்றுரைத்தவரும்,
வருடா வருடம் அங்கே வன்னியர் குல சத்ரியர் சார்பாக விழா எடுப்பவரும்
இவர்தான் .இதோடு இந்த சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் தங்களின்
பாட்டியாக சொல்லிருப்பதும் வன்னியர் ஜமீன் ஏழாயிரம் பண்ணையின் பட்டத்து
அரசி கண்ணுத்தாய் (எ) முத்தாலம்மா என்பவர் . இந்த ஜமீனில் சொத்துரிமை
கேட்டு பொய் வழக்கு போட்டு சிக்கியவர் ,அந்த ஜமீனில் வேலை செய்த நடராஜா
தேவரின் மகன் என்.ஜெகநாதன் என்பவர் . போலி உயில் செய்து வன்னியர் ஜமீன்
சொத்துக்களை அபகரிக்க பார்த்த இவர் இப்போது சிறை தண்டனை வாங்கியுள்ளார் :)
பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.