Thursday, September 19, 2013

தஞ்சை பகுதியில் தென்மலை ஜமீனை சேர்ந்த வீர பாண்டிய வன்னியனாருடன் ஒரு நாள் சுற்றுபயணம்

சமீபத்தில் நண்பர் திரு.சுந்தர் சம்புவராயர் திருமணம் (16-09-2013) அன்று தஞ்சையில் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது .

இதற்காக வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் தலைவர் திரு.ஆறு அண்ணல் கண்டர்,  வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் செயலாளர் முரளி நாயகர் , சென்னை தொழில் அதிபர்  ராஜேந்திர நாயகர் , மாநில பாமக மாணவர் அணி தலைவர் திரு.கவின் கண்டர் , மற்றும் ஊடகங்களில் பணி புரியும் நண்பர் திரு.ஸ்ரீவிஜய் கண்டர் , கார்த்திக் சம்புவராயர் ஆகியோர்களும் நானும் சென்றிருந்தோம் .

சிவகிரி சமஸ்தானத்திற்கு உட்பட்ட தென்மலை ஜமீனை சேர்ந்த "திரு.வீரபாண்டிய வன்னியனார் " பாபநாசத்திற்கு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தார் .

சுந்தர் சம்புவராயர் அவர்களுக்கு திருமணம் நடந்த மண்டபம்

வீரபாண்டிய  வன்னியனார் அவர்களுடன் நான் , கார்த்திக் சம்புவராயர் , பாமக மாணவர் அணியை சேர்ந்த கவின் கண்டர் அவர்கள் .



சோழன்குடி காடுவை சேர்ந்த திரு.குமார் வாண்டையார் (வன்னியர் சமூகம் ) அவர்கள் சுந்தர் சம்புவராயரின் அருகில் இருக்கிறார் .


இணையதள வன்னிய நண்பர்கள் திருமணத்தில் சத்ரியன் என்று  பொரித்த பொருளை திருமணதிற்கு பரிசாக அளித்தனர் .



திருமணம் முடிந்ததும் வீர பாண்டிய வன்னியனார் அவர்களை அழைத்து கொண்டு , பூம்புகார் பகுதியில் உள்ள சாயாவனம் கோவிலுக்கும், தில்லை நடராஜர் கோவிலுக்கும் செல்லலாம் என்று முடிவு செய்தோம் .

வழியில் சுவாமிமலை அருகில் "திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் " ராஜ முநேந்திரர்" பட்டம் கொண்ட படையாட்சி குடும்பத்தினரை" சந்திக்க சென்றோம்  . இவர்களே சூரியனார் கோவிலின் ஆதீனம் .

தஞ்சை பகுதியில் அனைத்து நவக்ரக சுவாமிகளுக்கும் தனி கோவில் உள்ளது . இங்குள்ள சூரியனார் கோவிலின் முதல் மரியாதைகளும், கோவில் தர்மகர்த்தா பொறுப்புகளும் இந்த  " ராஜ முநேந்திரர்"  குடும்பத்தை சேர்ந்தது .


சுவாமிமலை வழியில் நாங்கள் கண்ட திரௌபதி அம்மன் கோவில் .



 " ராஜ முநேந்திரர்"   வீட்டை அடைந்ததும் , அண்ணல் கண்டர் அவர்களும், வீர பாண்டிய வன்னியனார் அவர்களும், ராஜேந்திர நாயகர் அவர்களும் , இன்றைய சூரியனார் கோவில் ஆதீனமான "காளிமுத்து ராஜ முநேந்திரர்" அவர்களை  காண , அவர் வீட்டிற்கு சென்றார்கள் .

"காளிமுத்து ராஜ முநேந்திரர்" அவர்களுடன் அண்ணல் கண்டர் அவர்கள் .



சூரியனார் கோவில் அருள்மிகு சிவ சூரிய பெருமாள் திருகல்யாணத் திருவிழா அழைப்பிதழ் .


காளிமுத்து ராஜ முநேந்திரர் அவர்களுடன் நாங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் .



சிறிது நேரம் உரையாடிவிட்டு , பின்பு அங்கிருந்து பூம்புகார் நோக்கி சென்றோம் .பூம்புகாரில் பகுதியில் உள்ள "சாயாவனம் வில்லுடைய வேலவர்" கோவிலை அடைந்தோம் .

பூம்புகார் பகுதி எங்கும் பாமக கொடியும், வன்னியர் சங்கத்தின் கொடியும் பட்டொளி வீசி பறந்தன .

இது சிலப்பதிகாரம் காலத்து  பழமையான கோவில் .


பூம்புகாரில் பகுதியில் உள்ள "சாயாவனம் வில்லுடைய வேலவர் கோவிலில்" , சிவகிரி சமஸ்தானத்து தென்மலை ஜமீனை சேர்ந்த வீரபாண்டிய வன்னியனார் அவர்களுடன் சென்னை தொழில் அதிபர் ராஜேந்திர நாயகர்.


                                  

இயற்பகை நாயனார்க்கு இறைவன் (ஈசன் ) காட்சி கொடுக்கும் புகைப்படம் .
                              
இதைப்பற்றிய சிறிய கதை உண்டு . ஒரு வாணிக செட்டியார் சிறந்த சிவபக்தியுடன் இருந்ததாகவும் , எவருக்கும் இல்லை என்று சொன்னதில்லை என்ற கர்ண தன்மையுடன் இருந்ததாகவும் செய்தி . இவரை சோதித்து பார்க்க வந்த ஈசன் மானிட உருவில் வந்தாராம் . நாயனாரிடம்  எனக்கும் ஒன்றும் வேண்டும் , தருவீர்களா என்று கேட்டாராம் .

இல்லை என்ற வார்த்தை அறியாத நாயனார் தரேன் என்று வாக்கு கொடுத்தாராம் . உடனே எனக்கு உங்கள் மனைவி வேண்டும் என்று கூறினார் அந்த மானிடர் உருவில் இருக்கும் ஈசன் . அதற்க்கும் சம்மதித்த நாயனார், தன்  மனைவியிடம் இந்த செய்தியை கூறியிருக்கிறார் . கணவன் சொல்லே முக்கியம் என்று நினைத்த மனைவியும் இதற்க்கு சம்மதித்து அந்த மாநிடருடன் செல்ல ஒப்புகொண்டாராம் . (அந்த காலம் கணவன் எது சொன்னாலும் சம்மதிக்கும் காலம்தானே) .

இதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள்  நாயனாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இயற்கைக்கு எதிரானதை செய்யாதே என்று அறிவுரை கூறியதுடன் , நாயனாரிடம் சண்டைக்கும் வந்துள்ளனர் .
எனது பொருளை நான் யாரிடம் வேண்டுமானாலும் தருவேன் என்று கூறிய நாயனார், அவர்களை சிரைச்சேதம் செய்துள்ளார் .

பிறகு தனது மனைவியை அந்த மாநிடருடன் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினார் . வீடு திரும்பும்போது ,ஈசன் தான் யார் என்று கூறியதாகவும், அவர் மனைவியை திருப்பி தந்ததாகவும் ,அவர்கள் இருவருக்கும் ஈசனும் அம்பாளும் காட்சி தந்ததாகவும்  இந்த நாயனார் கதையை கோவில் ஐயர் எங்களுக்கு கூறினார் .

கோவிலில் ஐயருடன் நாங்கள் .
                                   


வில்லோடு காட்சி தரும் முருகர் .

                                

பூம்புகார் பகுதி எங்கும் பாமக கொடியும், வன்னியர் சங்கத்தின் கொடியும் பட்டொளி வீசி பறந்தன .

அங்குள்ள வன்னியர் சங்க கொடி கம்பத்தின் முன்பு  அண்ணல் கண்டர் அவர்களும் , வீரபாண்டிய வன்னியனாரும்.

                



பூம்புகாரில் காவேரி ஆறு


Friday, March 22, 2013

கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :


இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது.

அதாவது வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் , அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம் செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது ,

அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு

“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”
என்றும்
“அரியகுல மழுவெறி ராயர் ”

எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் .

பிறகு பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக் கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில் விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் .

புலியைக் கொன்றதால் பெற்ற விருது :
=======================================
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு

“மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ”

என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும்

மீன்கொடி , கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள கொடுத்ததோடு  தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து வரும்படியும் உரைத்திருக்கிறார் .

காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் :
=============================================

அப்போது செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு (காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர் ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.

இந்த சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து , பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது . ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது .

குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் :
==============================================

பிறகு வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் , மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் .

மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் .

ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் :
===============================
இறுதியாக தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில்

“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர் பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர்கள் ”

என்று குறிப்பிட்டுள்ளது .

வன்னியர்களின் அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம் ” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய பாளையக்காரர் பற்றி கூறும்போது

“-------------- மெச்சு பண்ணை
பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக்
கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை “

என்பது அதிலுள்ள பாடல் வரிகள் .

அதாவது பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும் நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் .

திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள்

"பாண்டிய நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது "

என்று எழுதிருக்கிறார் .

தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :
=====================================================================

தமிழ்நாட்டரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும் நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம் அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில் கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இவ்வோலைச்சுவடி 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் .

ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .

மேலே கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர் , செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும் விருதும் ஒன்று போல உள்ளன .

ஆகவே , இவ்வோலைச் சுவடியின் கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் , அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது .

ஆதாரம் :
========

நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
பக்கம் :43

Thursday, August 9, 2012

சிவகிரி வரகுண ராம பாண்டிய வன்னியனார் பற்றி கடிகை முத்து புலவர் அவர்கள் பாடிய திக்கு விஜயம் நூல் பற்றிய திரு.நடந் காசிநாதன் அவர்களின் ஆய்வு :

சிவகிரி வரகுண ராம பாண்டிய வன்னியனார் பற்றி கடிகை முத்து புலவர் அவர்கள் பாடிய திக்கு விஜயம் நூல் பற்றிய திரு.நடந் காசிநாதன் அவர்களின் ஆய்வு :

எமக்கு இந்த செய்தியை அளித்த பாபு நாயக்கர் அண்ணன் அவர்களுக்கு நன்றி